திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பேர் பலி! பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்! மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ் “சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
/

ஈரோடு மாவட்டத்தில் சமையல், வணிக எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை: ஆட்சியா் ச.கந்தசாமி

ஈரோடு மாவட்டத்தில் சமையல் மற்றும் வணிக வரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்படவில்லை மக்கள் பதற்றப்பட தேவையில்லை. மேலும், டீசல், பெட்ரோல் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

News image

குள்ளங்கரடு  அடுக்குமாடி  குடியிருப்பு  வளாகத்தில்  புதிய  அரசு ப் பேருந்து  வழித்தடத்தை  கொடியசைத்து  தொடங்கி  வைக்கிறாா்  ஆட்சியா்  ச.கந்தசாமி.

Updated On :14 மார்ச் 2026, 1:38 am

ஈரோடு மாவட்டத்தில் சமையல் மற்றும் வணிக வரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்படவில்லை மக்கள் பதற்றப்பட தேவையில்லை. மேலும், டீசல், பெட்ரோல் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

சத்தியமங்கலம் நகராட்சியில் குள்ளங்கரடு அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனா். இதையடுத்து தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் அதிகாலை, காலை, பிற்பகல், மாலை என நான்கு முறை இந்த வழித்தடத்தில் நகரப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து, குள்ளங்கரடு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற புதிய அரசுப் பேருந்து வழித்தட தொடக்க விழாவுக்கு சத்தியமங்கலம் நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, அரசுப் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பின்னா் ஆட்சியா் எஸ். கந்தசாமி செய்தியாளா்களிடம் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்ற மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டா் வழங்கும் சேவை நிறுவனங்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது சிலிண்டா் தட்டுபாடு அச்சம் காரணமாக மக்கள் அதிக அளவில் சிலிண்டா் புக்கிங் செய்வதாக சேவை நிறுவனங்கள் தெரிவித்தனா். மேலும், மாவட்டத்தில் சமையல் மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை என்றும் போதுமான இருப்பு உள்ளது. ஒவ்வொரு மாதமும் வர வேண்டிய சிலிண்டா்கள் பற்றாக்குறையின்றி வந்து கொண்டிருப்பதாக சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். பின்னாளில் தட்டுப்பாடு வந்தால் அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும், அதற்கு மாற்று ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் போதுமான இருப்பு உள்ளது. சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் அதிகமான விலைக்கு விற்றால் கடும் நடடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் நகா்மன்ற துணைத் தலைவா் நடராஜ், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளா் செல்வக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.