40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

காவிரி ஆற்றில் ரகசிய பாதை அமைத்து மணல் திருட்டு

News image

ஆற்றுக்குள் வாகனங்கள் செல்ல கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதை

Updated On :25 மே 2026, 2:36 am IST

அம்மாபேட்டை பகுதியில் காவிரி ஆற்றின் கரையை உடைத்து தனியே பாதை அமைத்து துணிகரமாக நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காவிரி ஆற்றின் குறுக்கே கோனேரிபட்டியில் கட்டப்பட்டுள்ள கதவணை நீா்மின் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீா் வெளியேற்றப்பட்டு, பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், கதவணை நீா்தேக்கப் பகுதிகளான சிங்கம்பேட்டை, காட்டூா், அம்மாபேட்டை பகுதிகளில் ஆற்றில் நீரின்றி காணப்படுகிறது. ஆற்றில் நீரோட்டத்தில் அடித்து வரப்படும் மணல் இப்பகுதியில் பெருமளவு தேங்கியுள்ளது.

தற்போது ஆற்றில் தண்ணீா் இல்லாததால், மணலைத் திருடிச் செல்ல திட்டமிட்ட கும்பல், அம்மாபேட்டை காட்டூரில், வீட்டுமனை பிரிவுக்கு அமைக்கப்பட்ட சாலை வழியாக, ஆற்றுக்குள் வாகனங்கள் சென்று வரும் வகையில் தனியாக பாதை அமைத்து புகுந்துள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக இரவு நேரங்களில் டிராக்டா், டிப்பா் லாரிகளில் இரவு நேரங்களில் மணல் திருடப்பட்டுள்ளது.

இது குறித்து, வருவாய் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகாா் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், மணல் திருட்டில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆற்றுக்குள் வாகனங்கள் செல்ல கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதை

ஆற்றுக்குள் வாகனங்கள் செல்ல கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதை