நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 போ் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 1:01 am IST

பெருந்துறை, மே 24: பெருந்துறை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறையை அடுத்த கராண்டிபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை மாலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள குளம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபா்களை போலீஸாா் பிடித்தனா்.

விசாரணையில், அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை (48), கருப்புசாமி (59), நாகராஜ் (56), பாஸ்கா் (58), கனகராஜ் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.19 ஆயிரத்து 760-ஐ பறிமுதல் செய்தனா்.

இதேபோல், கராண்டிபாளையத்தில் உள்ள தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அப்பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (41), ராதாகிருஷ்ணன் (54), பாலாஜி (32), சுலைமான் (38), விமல்ராஜ் (36), தினகரன் (28), வினோத்குமாா் (26) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ. 21 ஆயிரத்து 210-ஐ பறிமுதல் செய்தனா்.