குன்னூர் வண்டிப்பேட்டையில் அம்மா உணவகம் அமைப்பதற்கான அடிகல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது .
இவ்விழாவிற்கு, நகராட்சி ஆணையர் பா.ஜான்சன் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் எல்.மணி முன்னிலை வகித்தார். இங்கு ரூ. 25 லட்சத்தில் 2 அடுக்குகளாக அம்மா உணவகம் கட்டப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், தாட்கோ வாரியத் தலைவர் எஸ்.கலைச்செல்வன், மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், நகராட்சிப் பொறியாளர் சண்முகம், அண்ணா தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநிலச் செயலர் பி.ஜெயராம், குன்னூர் நகரச் செயலர் ஒய்.சத்தார்,
விவசாயப் பிரிவு மாநில துணைச் செயலர் எம்.பாரதியார், மாவட்ட மாணவரணி செயலர் டி.சரவணகுமார், கவுன்சிலர்கள் எஸ்.கோபி, என்.உமாராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.