கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை காட்டாடு இன மான் தாக்கியதில் முதியவர் காயமடைந்தார்.
ஓவேலி பேரூராட்சியிலுள்ள காமராஜ் நகரைச் சேர்ந்தவர் முகமது (65). காலை ஏழு மணிக்கு வீட்டு குழாயில் தண்ணீர் வரவில்லையென்று வீட்டருகே உள்ள குடிநீர் குழாயை சோதிக்கச் சென்றார். அப்போது வேகமாக ஓடிவந்த காட்டாடு இன மான் முகமதுவை தாக்கியது. காயமடைந்த அவரை அப் பகுதி மக்கள் மீட்டு, கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சேர்த்துள்ளனர்.