Enable Javscript for better performance
கடும் குளிர் தேர்வெழுதும்போது காலில் ஷூ இல்லாமல் நடுங்கும் மாணவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    கடும் குளிர் தேர்வெழுதும்போது காலில் ஷூ இல்லாமல் நடுங்கும் மாணவர்கள்

    Published on : 27th March 2014 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொதுத்தேர்வுகள் நடைபெறும் நேரங்களில் மாணவ, மாணவியர் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில், காலில் ஷூ அணிவதைத் தடுப்பதும் ஒன்றாகும். சமவெளிப் பகுதிகளில் இந்தக் கட்டுப்பாடு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், மலைமாவட்டமான நீலகிரியில் தேர்வெழுதும் மாணவ, மாணவியர் காலில் ஷூ இல்லாமல் குளிரில் தேர்வெழுத பெரிதும் சிரமப்படுகின்றனர்.

    ÷நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மாணவ, மாணவியரின் சீருடையில் காலில் சாக்ஸýம், ஷூவும் பிரதானவை. ஆனால், தற்போது பொதுத்தேர்வுகளில் மாணவ, மாணவியர் காலில் ஷூவுடன் தேர்வெழுத அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு பல்வேறு காரண்ங்களை கூறினாலும், தினந்தோறும் காலில் ஷூ அணிந்து பழகிய மாணவ, மாணவியர் தேர்வுக்கூடங்களில் காலில் ஷூ இல்லாமல் தேர்வெழுத பெரிதும் சிரமப்படுகின்றனர். ஏற்கெனவே, தேர்வினால் ஏற்பட்டுள்ள பதற்றத்தில் ஷூ மட்டுமின்றி, காலுறை கூட இல்லாமல் வெறும் காலுடன் தேர்வெழுதுவது தங்களை மனதளவில் வெகுவாக பாதிப்பதாக மாணவ, மாணவியர் கூறுகின்றனர்.

    ÷இப் பிரச்னை தொடர்பாக, பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றபோதே கல்வித்துறை அதிகாரிகளிடம் கூறியபோது, இது பொதுவான விதி என்பதால், தாங்களாக அதை மாற்ற முடியாது எனவும், இதுதொடர்பாக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும் கூறியிருந்தனர்.

    ÷ஆனால், தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் தொடங்கிவிட்ட சூழலில் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிலும் பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கே தொடங்குகின்றன. உதகை போன்ற பகுதிகளில், அப்போதுதான் சூரிய வெப்பம் பள்ளிக்கூடப் பகுதிகளில் எட்டிப்பார்க்கும். பொதுவாக முற்பகல் வரையிலுமே குளிராக இருக்குமென்பதால், காலை 9 மணிக்கே தேர்வுக்கூடத்திற்குள் செல்லும் மாணவ, மாணவியர் இந்த விதியால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

    ÷அத்துடன் தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் கவனமும் சிதறுவதால் மதிப்பெண்களை கூடுதலாக பெரும் வாய்ப்பும் பாதிக்கப்படுவதாக மாணவ, மாணவியரின் பெற்றோரும் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, இப்பிரச்னை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர், மாணவர்களின் கோரிக்கை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai