Enable Javscript for better performance
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நீலகிரியில் நாளை பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரும் வெள்ளிக்கிழமை (பிப்.28) நீலகிரியில் பிரசாரம் செய்கிறார்.

    இதுதொடர்பாக திமுக தலைமை தேர்தல் பணிக்குழு செயலர் பா.மு.முபாரக் கூறியது:

    ÷வியாழக்கிழமை இரவு கோவை ராஜவீதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, மேட்டுப்பாளையத்துக்கு வரும் ஸ்டாலின், அங்கு இரவு தங்குகிறார்.

    ÷வெள்ளிக்கிழமை காலை மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு குன்னூரில் வி.பி.தெருவிலுள்ள அண்ணா திடலில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதைத் தொடர்ந்து, உதகையில் காபி ஹவுஸ் சந்திப்பில் பகல் 12 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார். பகல் 1 மணிக்கு கட்டபெட்டிலும், பகல் 2 மணிக்கு கோத்தகிரியிலும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார். மாலையில் கோத்தகிரியிலிருந்து மீண்டும் மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட இடங்களில் பிரசாரம் செய்கிறார் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai