Enable Javscript for better performance
நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர்களாக மூவர் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர்களாக மூவர் நியமனம்

    By dn  |   Published on : 27th March 2014 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர்களாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர் என நீலகிரி ஆட்சியர் பி.சங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியது: நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பார்வையாளராக (பொது) ராகுல் புர்வார் நியமிக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஏப்ரல் முதல் வாரத்தில் நீலகிரிக்கு வருகிறார்.

    ÷தேர்தல் செலவின பார்வையாளர்களாக ஆந்திரத்தைச் சேர்ந்த மத்திய சுங்கத்துறை அதிகாரிகளான ஜி.நரேஷ், என்.நரேஷ் ஆகியோர் கவனிப்பர். சமவெளிப் பகுதிகளான பவானிசாகர், மேட்டுப்பாளையம் மற்றும் அவினாசி ஆகிய 3 தொகுதிகளின் தேர்தல் செலவினங்களையும் ஜி.நரேஷும், நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 3 தொகுதிகளின் தேர்தல் செலவினங்களையும் மற்றொரு அலுவலர் என்.நரேஷும் கண்காணிப்பர். இவர்கள் இருவரும் வரும் 28-ம் தேதி நீலகிரிக்கு வருகின்றனர்.

    ÷அதேபோல, தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக ஆந்திராவிலிருந்து துணை ராணுவ பாதுகாப்பு படையை சேர்ந்த 80 பேர் கொண்ட குழுவினர் நீலகிரிக்கு வந்துள்ளனர். இவர்களில் 70 பேர்  மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் உடனடியாக தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார் ஆட்சியர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai