Enable Javscript for better performance
உதகை குன்னூரில் பரவலாக மழை- Dinamani

சுடச்சுட

    

    நீலகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட உதகை, குன்னூர், கூடலூர் பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    உதகை மற்றும் குன்னூரில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன்  காணப்பட்டது. மதியம் இப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக இப்பகுதிகளுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சிரமப்பட்டனர்.  இந்த மழையால், காய்கறி மற்றும் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூரில்... கூடலூரில் கனமழை பெய்ததில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது.கூடலூர் அதன் சுற்றுப்புறப் பகுதியில் வியாழக்கிழமை மதியம் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதில், சாலைகளில் ஓடிய மழை வெள்ளத்தால் வாகனங்களை இயக்கமுடியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.  வியாபாரிகள் உள்பட பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai