Enable Javscript for better performance
காய்கறிக் கண்காட்சிக்கு தயாராகி வரும் நேரு பூங்கா- Dinamani

சுடச்சுட

    

    காய்கறிக் கண்காட்சிக்கு தயாராகி வரும் நேரு பூங்கா

    By கோத்தகிரி  |   Published on : 17th April 2015 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோத்தகிரியில் மே மாதம் நடைபெறவுள்ள காய்கறிக் கண்காட்சிக்காக நேரு பூங்காவில் ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

     நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா, கோத்தகிரி காய்கறிக் கண்காட்சியுடன்   ஆண்டுதோறும் துவங்கும். இதைத் தொடர்ந்து, உதகை மலர்க் கண்காட்சி, குன்னூர் பழக் கண்காட்சிகள் நடைபெறும்.

     இந்தாண்டு கோடை விழாவுக்கான காய்கறிக் கண்காட்சி, மே 2, 3 தேதிகளில் நேரு பூங்காவில் நடைபெறவுள்ளது. விழாவை மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் துவக்கி வைக்கிறார்.

    இதற்காக, தற்போது பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பூங்காவை தூய்மைப் படுத்தி பல்வேறு வகையான பூக்களின் நாற்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.    

    இதுகுறித்து பேரூராட்சித் தலைவர் சை.வாப்பு கூறுகையில், பூங்காவை அழகுபடுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவடைந்தவுடன், பேரூராட்சி பராமரிப்பில் உள்ள பூங்கா, தோட்டக் கலைத்துறை வசம் ஒப்படைக்கப்படும் என்றார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai