Enable Javscript for better performance
குரங்குகள் காப்பகப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    குரங்குகள் காப்பகப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

    By குன்னூர்  |   Published on : 17th April 2015 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்னூர், வண்டிச்சோலைப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் குரங்குகள் காப்பகத்தின் பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டுமென விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குன்னூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களில் குரங்குகள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன. இவை, அடிக்கடி வாகனங்களில் சிக்கி காயமடைவதும், உயிரிழப்பதும்  நிகழ்ந்து வருகின்றன.

    இதைத் தடுக்க, குன்னூர் வனத்துறை சார்பில், கடந்த 2014- ஆம் ஆண்டு வண்டிச் சோலைப் பகுதியில் குரங்குகள் காப்பகம் அமைக்க திட்டமிடப்பட்டது. 

    இதற்காக ரூ. 12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.  இந்நிலையில், குரங்குகளுக்கான அறுவை சிகிச்சை அறை மற்றும் இதர வசதிகள் செய்ய நிதி இல்லாததால் காப்பகம் ஓராண்டு காலமாக மூடியே கிடக்கிறது. 

    இதுகுறித்து குன்னூர் வனச்சரகர் சிவாவிடம் கேட்டபோது, இந்த குரங்குகள் காப்பகத்தில் மேலும் பணிகள் மேற்கொள்ள ரூ. 23  லட்சம் தேவைப்படுகிறது. அந்த நிதி கிடைத்ததும் நிலுவையிலுள்ள பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    தற்போது நீலகிரி மாவட்டத்தில் சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களுக்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

    எனவே, விரைவில் நிதி ஒதுக்கி குரங்குகள் காப்பகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai