Enable Javscript for better performance
பந்தலூர் அருகே யானை தாக்கி தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    பந்தலூர் அருகே புதன்கிழமை இரவு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தார்.

      பந்தலூர் தாலுகா, நெல்லியாளம் பகுதியில் வசிப்பவர் விஜயகுமார் (40). பந்தலூர் கூட்டுறவு இன்கோ தேயிலைத் தொழிற்சாலையில் பணியாற்றும் இவர்,  பணி முடிந்து, புதன்கிழமை இரவு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.

    ஏலமண்ணா பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது, காட்டில் மறைந்திருந்த யானை மோட்டார் சைக்கிளை வழிமறித்து இழுத்துள்ளது.

    இதில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற குட்டன் தப்பி ஓடிவிட்டார். பின்னர், யானை தாக்கியதில் விஜயகுமார் உயிரிழந்தார்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தேவாலா போலீஸார், விஜயகுமாரின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai