Enable Javscript for better performance
குடியரசு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    கூடலூர், பந்தலூர் பகுதியில் குடியரசு தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

    கூடலூர் நீதிமன்றம், கூடலூர் கிளைச் சிறை ஆகிய இடங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், நீதிபதி ஆர்.கனகராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சி.விஜய்பாபு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கினார். கூடலூர் நகராட்சியில் நடைபெற்ற விழாவிற்கு, ஆணையர் ஓ.ராஜாராம் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் ரமாமணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    இதே போல, கூடலூர் தோட்டக் கலைத் துறை அலுவலகம், கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆகிய இடங்களில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் ஆரி, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பந்தலூரிலுள்ள நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் லட்சுமணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai