Enable Javscript for better performance
உதகையில் வனத்துறை அலுவலர்கள் பயிற்சி முகாம் துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    உதகையில் வனத்துறை அலுவலர்கள் பயிற்சி முகாம் துவக்கம்

    By உதகை  |   Published on : 28th January 2015 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உதகை, ஜன. 27: உதகையிலுள்ள ஆராய்ச்சி மையத்தில் வனப் பகுதிகளில் நீர்ப்பிரி முகடுப் பகுதி மேலாண்மை தொடர்பான வனத்துறை அலுவலர்களுக்கான 11 நாள் திறன்

    மேம்பாட்டுப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

     இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இம்முகாமில், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், மகாராஷ்டிரம் மற்றும் தமிழகத்தை

    சேர்ந்த பயிற்சி வனச் சரகர்கள் பங்கேற்றனர்.

     இப்பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்த மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் ஸ்ரீனிவாசரெட்டி பேசியதாவது:

     வனத்துறையில் தற்போது பயிற்சி அதிகாரிகள் பொறுப்பிலுள்ளவர்கள் முக்கிய அதிகாரிகளாக பதவிக்கு வரும்போது தங்கள் பகுதியின் நிர்வாகம், நிதி மேலாண்மை,

    திட்டங்களை செயலாக்குதல் உள்ளிட்டவற்றைக் குறித்து அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஏற்கெனவே இதுபோன்ற பிரிவுகளில் பயிற்சி பெற்றிருந்தால்தான் முன்

    அனுபவத்தின் அடிப்படையில் அவர்களால் செயலாற்ற முடியும். எனவே, பயிற்சிக் காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அனைத்தையுமே கற்றுக்கொள்ள

    வேண்டியது அவசியம் என்றார்.

     இந்நிகழ்ச்சியில் இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கோலா, முதுநிலை விஞ்ஞானி டாக்டர் மணிவண்ணன், மாநில வனப்

    பணியாளர்களுக்கான மத்திய உயர் பயிற்சியகத்தின் இயக்குநர் கே.ரமேஷ்குமார், நீலகிரி தெற்கு வனக்கோட்ட அலுவலர் பத்ரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai