Enable Javscript for better performance
சேரம்பாடியில் அரிய வகை மரங்கள் வெட்டிக் கடத்த முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    சேரம்பாடியில் அரிய வகை மரங்கள் வெட்டிக் கடத்த முயற்சி

    By கூடலூர்  |   Published on : 28th January 2015 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடலூர், ஜன. 27: பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் செவ்வாய்க்கிழமை அரிய வகை மரங்களை வெட்டிக் கடத்த முயன்றுள்ளனர்.

     பந்தலூர் வருவாய் வட்டம், சேரம்பாடி அருகேயுள்ள சப்பந்தோடு பகுதியில் தனியார் தோட்டத்தில் தாணி உள்பட நான்கு அரிய வகை மரங்களை வெட்டிக் கடத்துவதாக

    கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.

     தகவலை அறிந்த கோட்டாட்சியர் சி.விஜய்பாபு, வருவாய் ஆய்வாளர் முத்துமாரி ஆகியோர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர். அதில், மரங்கள் வெட்டிக் கடத்த

    முயற்சி செய்தது தெரியவந்தது.

     இதையடுத்து, வெட்டப்பட்ட மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தோட்ட உரிமையாளர் வர்கீஸ் மீது வழக்குப் பதிவு செய்து கோட்டாட்சியர் விசாரனை நடத்தி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai