Enable Javscript for better performance
சேரம்பாடியில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சேரம்பாடியில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

    By கூடலூர்  |   Published on : 28th January 2015 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடலூர், ஜன. 27: பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     சேரங்கோடு ஊராட்சியிலுள்ள பூதமூலா - கையுண்ணி சாலையில் கடந்த 18-ஆம் தேதி சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

     சாலை சேதமடையாமல் இருக்க ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் மாற்றுப் பாதையில் செல்ல வலியுறுத்தியுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த பிஜு என்பவர் சாலை

    உலர்வதற்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றதால் பொதுமக்களுக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

     இதையடுத்து, பிஜு சேரம்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சதீஷ், ராமகிருஷ்ணன் ஆகியோரை உதவி ஆய்வாளர் சிவாஜி வினீஷ் கைது செய்துள்ளார். 

     கைது செய்த விவரத்தை கேட்கச் சென்ற வழக்குரைஞர் மற்றும் பொதுமக்களை உதவி ஆய்வாளர் உதாசீனப்படுத்தியதாகக் கூறி, பொதுமக்கள் சேரம்பாடி காவல்

    நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     இதையடுத்து, பந்தலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பிரமணி, சுங்கம் பகுதியில் பொதுமக்களை நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதில், உதவி ஆய்வாளர்

    மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திவிட்டு திரும்பிச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai