சுடச்சுட

  

  நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

   இக்கூட்டத்தில், குன்னூர், கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இரவுக் காவலர்களாகப் பணியாற்றவுள்ள இருவருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியர் பி.சங்கர் வழங்கினார்.

   பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் நலத்துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை, மாநில நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றிற்கு தலா ரூ. 55,000 மதிப்பிலான 4 மர அறுவை இயந்திரங்களை வழங்கினார்.

   தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து 105 மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

   இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட வன அலுவலர் பத்ரசாமி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai