Enable Javscript for better performance
குன்னூரில் குடிநீர் பஞ்சம்: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    குன்னூரில் குடிநீர் பஞ்சம்: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

    By குன்னூர்  |   Published on : 01st September 2015 05:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்னூரில் குடிநீர் பஞ்சம் நிலவுவதாக, நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளனர்.

     குன்னூர் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் டி.சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது.

     கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியது:

     சத்தார் (அதிமுக): நகராட்சியில் பல பகுதிகளில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தெருவிளக்குகள் முறையாகப் பராமரிக்கப்படுவது இல்லை. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

     மாதா (அதிமுக): ஓட்டுப்பட்டரை பகுதியில் குடிநீர் குழாய்கள் இணைப்பை முறைப்படுத்த வேண்டும்.

     குணசீலன் (திமுக): கடந்த 4 ஆண்டுகளாக நகரப் பகுதியில் பெரும்பாலானோர் பட்டா கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். நகராட்சி நிலங்களுக்கு பட்டா வழங்கத் தடை உத்தரவு உள்ளதால், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     நசீர்கான் (அதிமுக): ஐயப்பன் கோயில் அருகே உள்ள பொதுக்கழிப்பிடங்கள் பழுதடைந்து, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும், குடிநீர் குழாய்கள் செல்லும் இடங்களில் கழிவுநீர் கால்வாயும் இருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     அழகுமணி (திமுக): காந்திபுரம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இங்குள்ள மக்கள் ஊற்று நீரை மட்டுமே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கிணற்று மோட்டாரும் பழுதடைந்துள்ளதால் இதைச் சீரமைக்க வேண்டும்

     மணி (துணைத் தலைவர்): குன்னூர் பேருந்து நிலையத்தில் பாலூட்டும் பெண்களுக்காக தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கு கழிவறை வசதியும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

     அந்தோணிராஜ் (திமுக): எனது வார்டில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     மணிகண்டன் (அதிமுக): ஓட்டுப்பட்டரை சாலையில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததால், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, உடனடியாக குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     தலைவர்: தெருவிளக்கு பராமரிப்பு பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நகரப் பகுதியில் முழுமையாக தெருவிளக்குகளைப் பராமரிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஒப்பந்ததாரரின் டெண்டர் ரத்து செய்யப்படும். துணைத் தலைவர் கூறிய இடத்தில் கழிவறை ஏற்படுத்துவதுடன் கிரில் கதவும் பொறுத்தப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai