Enable Javscript for better performance
தனியார் கல்லூரி மீது மாணவர் புகார்- Dinamani

சுடச்சுட

    

    இலவசக் கல்வி அளிப்பதாகக் கூறி ஏமாற்றிய கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆதிவாசி மாணவர் மணிகண்டன் உதகையில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் அளித்தார்.

     இதுகுறித்து, அவர் அளித்துள்ள மனு விவரம்:

     கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 1,074 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றிந்ததால், எனக்கு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது.

     நான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால், கல்விக் கட்டணத்திலிருந்து  விதிவிலக்கு அளிப்பதாகக் கூறிய கல்லூரி நிர்வாகம், எனது மருத்துவப் படிப்பிற்கான கட்டணம் ஏதும் தேவையில்லை எனத் தெரிவித்தது. அதனடிப்படையில், தமிழக அரசின் சார்பில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை ஏற்காமல் இக்கல்லூரியில் சேர்ந்து படித்தேன்.

     தற்போது 2 ஆண்டு கல்வி முடிந்துள்ள நிலையில், திடீரென அக்கல்லூரி நிர்வாகம் கடந்த 2 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணமாக ரூ. 6 லட்சத்தை செலுத்த வேண்டும் என வற்புறுத்தி வருகிறது. அத்துடன் இத்தொகையை செலுத்தும் வரை கல்லூரிக்கு வரக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.   இதனால், எனது கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என தெரிவித்தார்.

     இதுதொடர்பாக, நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் உறுதியளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai