சுடச்சுட

    

    குன்னூர்-உதகை மலைப்பாதையில் விபத்து: ஒருவர் பலி

    By குன்னூர்  |   Published on : 02nd September 2015 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்னூர் - உதகை மலைப்பாதையில் பேருந்து, கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.

     கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தொடுபுளா கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன். இவரது, மகன்கள் மனு (26), தீபு (26). அதே, கிராமத்தைச் சேர்ந்த மாதவன் மகன் ராஜேஸ் (43), சோமன் மகன் அர்ஜூன் (21).

     ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் ஓணம் பண்டிகையையொட்டி, தொடர் விடுமுறை வந்ததால் கேரளத்தில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். 2 நாள்கள் தங்கி சுற்றி பார்த்த பின்பு செவ்வாய்க்கிழமை மாலை உதகையில் இருந்து குன்னூருக்குச் சென்று கொண்டிருந்தனர். கன்டோண்மென்ட் மயானம் அருகே சென்று கொண்டிருந்த போது குன்னூரில் இருந்து வந்த அரசுப் பேருந்து மீது கார் மோதியது.

     இதில், காரை ஓட்டி வந்த தீபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மற்ற 3 பேரையும் பொதுமக்கள் மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து காரணமாக, குன்னூர்-உதகை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     இதுகுறித்து, குன்னூர் காவல் ஆய்வாளர் வி.வி.சிவகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai