சுடச்சுட

    

    நீலகிரியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

    By உதகை  |   Published on : 02nd September 2015 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீலகிரி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

     கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடைபெற்ற இம்முகாமை உதகை அருகே உள்ள நீத்தி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

     கோமாரி நோயை கட்டுப்படுத்தும் திட்டத்தின்கீழ் நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 1 முதல் 21-ஆம் தேதி வரையிலும், விடுபட்ட கால்நடைகளுக்கு செப்டம்பர் 22 முதல் 30-ஆம் தேதி வரையிலும் தடுப்பூசி போடப்படும்.

     எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில் எந்தெந்த தினங்களில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது என்ற விவரத்தை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையங்களை நேரடியாக தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றார். முகாமில், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் வி.தங்கவேலு, சிறப்பு மருத்துவர் ஜெகன்மோகன், உதவி இயக்குநர் மகேந்திரன், ஆவின் மேலாளர் டாக்டர் சைலேந்திரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai