Enable Javscript for better performance
மூலிகைத் தாவரங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மூலிகைத் தாவரங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

    By கோத்தகிரி  |   Published on : 02nd September 2015 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோத்தகிரியில் மூலிகைத் தாவரங்களை பாதுகாத்தல் குறித்த  விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

     இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம், நீலகிரி ஆதிவாசி நலச்சங்கம் இணைந்து நடத்திய முகாமுக்கு, ஆதிவாசி நலச்சங்க செயலர் ஆல்வாஸ் தலைமை வகித்தார். மூத்த விஞ்ஞானி ஜி.ராமமூர்த்தி வரவேற்றார்.  இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத் தலைவர் டாக்டர் ஆர்.ஆர்.ஹன்சிலால் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மூலிகைத் தாவரங்களால் ஏற்படும் நன்மைகள், அவற்றை பாதுகாத்தல் ஆகியன குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில், கோத்தகிரி விவசாயிகள், பழங்குடியின மக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai