சுடச்சுட

    

    கூடலூர், பந்தலூர் பகுதிகளில் சுற்றித் திரியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

     இதுகுறித்து, இந்த சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் என்.சுப்பிரமணியம் வன அலுவலருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

     கூடலூர், பந்தலூர் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.

     இந்நிலையில், திங்கள்கிழமை இரவு முருக்கம்பாடி கிராமத்துக்குள் நுழைந்த பத்துக்கும் மேற்பட்ட யானைகள் காளியம்மாள் என்பவரின் வீட்டை இடித்து சேதப்படுத்தின.

     இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், பொதுமக்களையும், விவசாயிகளையும் யானைகளிடமிருந்து பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai