Enable Javscript for better performance
குன்னூரில் 500 டன் தேயிலை தூள் தேக்கம்- Dinamani

சுடச்சுட

    

    லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, 500 டன் தேயிலைத் தூள்கள் தேக்கமடைந்துள்ளதாக தேயிலை பாரம் துக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாவது:

    நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலைகள் நாட்டின் பல பகுதிகளில் சந்தைப்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளான ரஷ்யா, ஈரான், ஈராக், எகிப்து, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது வழக்கம்.

    நாளோன்றுக்கு 50 லாரிகளில் தேயிலை ஏற்றப்பட்டு பல இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. ஒரு லாரிக்கு 10 டன் வீதம் தேயிலை ஏற்றப்படுகிறது. தற்போது, லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் காரணமாக குன்னூரில் உள்ள 22 தேயிலை குடோன்களில் 500 டன் தேயிலைத் தூள்கள் தேக்கமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai