Enable Javscript for better performance
தேசிய அளவிலான சதுரங்கப் போட்டி: கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    தேசிய அளவிலான சதுரங்கப் போட்டி: கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வு

    By உதகை  |   Published on : 03rd September 2015 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிக்கு உதகை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

     இதுதொடர்பாக, நீலகிரி மாவட்ட சதுரங்கக் கழகச் செயலர் பஷீர் அகமது தெரிவித்துள்ளதாவது:

     நீலகிரி மாவட்டத்தில் அருவங்காடு கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 4-ஆம் தேதி கிளஸ்டர் அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.

     இதில், 14, 17, 19 வயதுக்கு உள்பட்டோர் பிரிவுகளின் கீழ் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவிகள் தென் மண்டல அளவிலான சதுரங்கப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

     இவர்கள் ஆகஸ்ட 24, 25-ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். 170 மாணவ, மாணவிகள் பங்கேற்ற இப்போட்டியில், உதகை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவன் சர்ப்ஃராஸ் 19 வயதுக்கு உள்பட்டோர் பிரிவிலும், மாணவி மித்தியா 17 வயதுக்கு உள்பட்டோர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

     இதைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் தில்லியில் நடைபெறவுள்ள அகில இந்திய அளவிலான சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai