சுடச்சுட

  

  மத்திய அரசைக் கண்டித்து புதன்கிழமை நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தால் நீலகிரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

   தொழிலாளர் விரோத கொள்கையை கைவிடல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த வேலை நிறுத்தத்தால் நீலகிரி மாவட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

   அரசுப் பேருந்துகள், டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியன வழக்கம் போல இயங்கின. கடைகள், தனியார் நிறுவனங்களும் வழக்கம் போல செயல்பட்டன.

   அருவங்காடு வெடிமருந்துத் தொழிற்சாலை, டான் டீ உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கும், எல்ஐசி, மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை.

   அதேபோல, இக்கோரிக்கையை வலியுறுத்தி குன்னூர் ரயில் பாதையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியியைச் சேர்ந்த 47 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

   கூடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், அரசு ஊழியர்கள் என 50-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai