சுடச்சுட

    

    ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

    By உதகை  |   Published on : 04th September 2015 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடலூர் அருகே உள்ள சூண்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியர் ராணி சிவகாமிக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தினத்தையொட்டி, இவ்வாண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விருதுக்கு, தமிழக-கேரள எல்லைப் பகுதியான சூண்டி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி கடந்த மே மாதம் ஓய்வு பெற்ற ராணி சிவகாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து ராணி சிவகாமி கூறியதாவது:

    ஆசிரியர் பணியில் சேர்ந்ததிலிருந்து ஓய்வு பெறும் வரை 11 பள்ளிகளில் பணியாற்றியுள்ளேன். ஒரு ஆசிரியர் மாணவர்களிடையே நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி அவர்களது திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையிலும், அவர்களிடையே தன்னம்பிக்கையை உருவாக்கும் வகையிலும் செயல்பட வேண்டும். ஊரகப் பகுதிகளில் பணியாற்றுவதும், வசதியில்லா ஏழைக் குழந்தைகள் மேற்படிப்பை தொடர வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதும் மிக சவாலானவையாகும். கூடலூரில் பாத்திமா கான்வென்ட் பள்ளி ஆசிரியைகளும், உதகை பெத்லகேம் ஆசிரியர் பயிற்சி நிறுவனமுமே தனது வெற்றிக்கு வித்திட்டவர்கள். இவ்விருதை நீலகிரி மாவட்ட மாணவ சமுதாயத்துக்கு அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai