Enable Javscript for better performance
கதவு அமைக்க தனியார் எஸ்டேட் மீண்டும் முயற்சி: பொதுமக்கள் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    கதவு அமைக்க தனியார் எஸ்டேட் மீண்டும் முயற்சி: பொதுமக்கள் முற்றுகை

    By குன்னூர்  |   Published on : 04th September 2015 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்னூர் அருகே தனியார் எஸ்டேட் நிர்வாகம் மீண்டும் கதவு அமைக்க முயற்சித்ததையடுத்து, பொதுமக்கள் அப்பகுதியில் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

    குன்னூர், மேலூர் ஊராட்சிக்கு உள்பட்ட தூதூர்மட்டம் கிராமம் அருகே தனியார் எஸ்டேட் உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலையை சட்டன், தூதூர்மட்டம், கெரடாலீஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், தனியார் எஸ்டேட் நிர்வாகம் திடீரென இரும்புக் கதவு அமைத்து சாலையை அடைத்தது. இதனால் பாதிக்கப்பட்ட இதையடுத்து, குன்னூர் வருவாய்க் கோட்டாட்சியர் பழனிக்குமார், எஸ்டேட் நிர்வாகத்திற்குச் சொந்தமான இடத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்தை வண்டிப்பாதை உள்ளதாக வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளதால் அந்தச் சாலையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து எஸ்டேட் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, வருவாய்க் கோட்டாட்சியரின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை பெற்றது. இதையடுத்து, எஸ்டேட் நிர்வாகம், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையில் மீண்டும் கதவும் அமைக்க முயற்சித்தது.

    இதுகுறித்து, தகவலறிந்த தூதூர்மட்டம் கிராம மக்கள் அப்பகுதியில் முற்றுகையிட்டு கதவு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

    மேலும், அவர்கள் இப்பிரச்னை தொடர்பாக கொலக்கம்பை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்தை நடத்தினர். அப்போது, வருவாய்க் கோட்டாட்சியர் உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் கதவு அமைப்பது குறித்து முடிவெடுக்கலாம் எனக் கூறியதை அடுத்து எஸ்டேட் நிர்வாகத்தினர் கதவு அமைக்கும் பணியை தாற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai