சுடச்சுட

  

  கோத்தகிரியில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய வழக்கில் 3 பேருக்கு வனத் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

  கோத்தகிரியை அடுத்த பர்ன்சைடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (48). தொழிலாளியான இவர் புதன்கிழமை அப்பகுதியிலுள்ள வனத்தில் காட்டுப் பன்றியை வேட்டையாடி அதன் மாமிசத்தை கோத்தகிரி, முல்லை நகரைச் சேர்ந்த சின்னவர் (35), நடராஜ் (55) ஆகியோருக்கு விற்பனை செய்துள்ளார்.

  தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனச் சரகர் முஸ்தபா, வனவர் சந்திரமோகன், வனப் பாதுகாவலர்கள் முருகன், தர்மன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அதில், சுப்பிரமணி காட்டுப் பன்றியை வேட்டையாடியதும், அதன் மாமிசத்தை சின்னவர், நடராஜ் ஆகியோர் வாங்கியதும் தெரியவந்தது.

  இதையடுத்து, மாவட்ட வனப் பாதுகாப்பு அலுவலர் பத்ரசாமி உத்தரவின் பேரில், சுப்பி ரமணிக்கு ரூ. 10 ஆயிரமும், சின்னவர், நடராஜ் ஆகியோருக்கு தலா ரூ. 4 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai