Enable Javscript for better performance
கோத்தகிரியில் நகைத் திருட்டு: இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோத்தகிரியில் வீட்டில் வைத்திருந்த 2 பவுன் நகையைத் திருடிச் சென்ற இருவரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

    கோத்தகிரி, கண்ணேரிமுக்கு பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (28). இவர், தனது வீட்டில் வைத்திருந்த 2 பவுன் நகை மற்றும் டிவிடி பிளேயர் ஆகியவை திருட்டுப் போனதாக கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    அதன்பேரில், கோத்தகிரி காவல் உதவி ஆய்வாளர் பிராங்ளின், சிறப்பு உதவி ஆய்வாளர் லாரன்ஸ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சுதாகர் வீட்டில் இருந்து நகை, டிவிடி பிளேயர் ஆகியவற்றைத் திருடியது கண்ணேரி முக்கு அருகில் உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (18), மதியழகன் (18) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai