சுடச்சுட

    

    குஞ்சப்பனை உண்டு உறைவிடப் பள்ளி மாணவர் மாயம்

    By கோத்தகிரி  |   Published on : 05th September 2015 02:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோத்தகிரியை அடுத்த குஞ்சப்பனை உண்டு உறைவிடப் பள்ளியிலிருந்து காணாமல் போன மாணவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

    கோத்தகிரி அருகில் உள்ள குஞ்சப்பனை பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் காத்தாடிமட்டம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (13) 7-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர், ஆகஸ்ட் 31-ஆம் தேதி பள்ளி இடைவேளைக்குப் பின்னர் வகுப்பிற்கு வரவில்லையெனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினரும், மாணவரின் பெற்றோரும் அவரைத் தேடி வந்தனர். ஆனால், இதுவரை அவர் கிடைக்கவில்லை.

    இந்நிலையில், பள்ளித் தலைமையாசிரியர் (பொ) ஆதிமூலம் மாணவர் மாயமானது குறித்து வெள்ளிக்கிழமை கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன மாணவர் பாஸ்கரை தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai