சுடச்சுட

    

    கோத்தகிரி ஆரோக்கிய மாதா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

    By கோத்தகிரி  |   Published on : 05th September 2015 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா திருக்கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை துவங்கியது.

    ஆண்டு தோறும் செப்டம்பர் முதல் வாரத்தில் கொடியேற்றப்பட்டு 2-ஆவது வாரம் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறும். அதன்படி, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு ஈரோடு பங்குத் தந்தை அருண் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து, கோத்தகிரி பங்குத் தந்தை ரொஸாரியா தலைமையில் ஆலய வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    செப்டம்பர் 13-ஆம் தேதி வரை பல்வேறு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் பங்குத் தந்தையர் ரொஸாரியா, அருண், மகேஷ், அலெக்சாண்டர் ஆகியோரது தலைமையில் நடைபெறும்.

    13-ஆம் தேதி ஆயர் அ.அமல்ராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலியுடன் ஆரோக்கிய மாதா திருவிழா நடைபெறும். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு பங்குத் தந்தை சகாய் தலைமையில் ஆடம்பர தேர் பவனி, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறும்.விழாவையொட்டி, அன்றைய தினம் சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai