சுடச்சுட

  

  நீலகிரி மாவட்டத்தில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் ஆளுமை விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   இதுதொடர்பாக, மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

   தமிழக அரசு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் ஆளுமை விருதை அறிவித்துள்ளது. மக்களுக்கான சேவைகளை ஏற்று நடத்த மென்பொருள் பயன்பாடுகளை உருவாக்கும் தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோரின் சமூக பொறுப்புணர்வை மதித்து அங்கீகாரம் அளிப்பதே இதன் நோக்கம்.

   இதில், பல்வேறு துறைகளில் சிறந்த மின் ஆளுமை மென்பொருள் பயன்பாடு, மக்களுக்கான மின் ஆளுமை சேவைகளை வழங்கும் செல்லிடப்பேசிக்கு உரிய மென்பொருள் பயன்பாடு, கண்டுபிடிப்பிற்கான மின் ஆளுமை விருது ஆகிய பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், ஒவ்வொரு பிரிவிலும் தலா இரு விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது, ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். இதற்காக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் அனுப்ப வேண்டும்.

   இதுதொடர்பான, கூடுதல் விவரங்களை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai