சுடச்சுட

    

    நீலகிரியில் அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றும் பணி தொடக்கம்

    By உதகை  |   Published on : 05th September 2015 02:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீலகிரி மாவட்டத்தில் சாலையோரங்களில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

     நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு, தென்மேற்கு பருவமழைக் காலங்களின் போது சாலையோரங்களில் உள்ள அபாயகரமான மரங்கள் விழுவதால், போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது.

     மேலும், சில சமயங்களில் வாகனங்களின் மீதும், குடியிருப்பு பகுதிகளிலும் விழுவதால் உயிர்ச் சேதமும், பொருள் சேதமும் ஏற்படுகிறது.

     இப்பிரச்னைகளைத் தவிர்க்கும் வகையில், வனத்துறை சார்பில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முயற்சியின் மூலமாக நீலகிரி மாவட்டத்தை சமவெளிப் பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலைகளில் உள்ள அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற மாவட்ட நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

     முதல்கட்டமாக உதகையில் தொட்டபெட்டா சந்திப்பிலிருந்து கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு பகுதி வரையிலான சாலையோர மரங்களை அகற்றும் பணியை வனத்துறை தொடங்கியுள்ளது. தொடர்ந்து, மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இத்தகைய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai