சுடச்சுட

  

  மாநில கைப்பந்துப் போட்டி: 13-ஆம் தேதி வீரர்கள் தேர்வு

  By உதகை  |   Published on : 05th September 2015 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஈரோட்டில் நடைபெறவுள்ள மாநில அளவிலான ஜூனியர் கைப்பந்து போட்டிகளுக்கான நீலகிரி மாவட்ட வீரர்கள் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   இதுதொடர்பாக, நீலகிரி மாவட்ட கைப்பந்துக் கழகச் செயலர் பி.ஜெகந்நாதன் தெரிவித்துள்ளதாவது:

   ஈரோட்டில் செப்டம்பர் 27 முதல் 30-ஆம் தேதி வரை மாநில அளவிலான ஜூனியர் கைப்பந்துப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

   இதில், பங்கேற்கவுள்ள நீலகிரி மாவட்ட அணி வீரர்கள் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி உதகையில் எச்பிஎப் மைதானத்தில் நடைபெறும். 1.1.1998-க்குப் பின் பிறந்தவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க தகுதியானவர்களாவர்.

   இதுதொடர்பான, கூடுதல் விவரங்களை 94430 52575 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai