சுடச்சுட

  

  குன்னூர் அருகே வெலிங்டன் பகுதியில் ரயில்வே மேம்பால நடைபாதையை மூடியதால் பொதுமக்கள் கன்டோன்மென்ட் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். 

   குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் போகி தெரு பகுதி மக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள ரயில்வே மேம்பால நடைபாதையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

   இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் நடைபாதையை அடைத்து, நடந்து செல்லத் தடை விதித்ததால் பொதுமக்கள் கன்டோண்மென்ட் அலுவலகத்தை போர்டு உறுப்பினர் துரைராஜ் தலைமையில், முற்றுகையிட்டனர்.

   மேலும், இதுதொடர்பாக அதிகாரிகளிடமும், வெலிங்டன் காவல்நிலையத்திலும் பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

   இதில், பல ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலம் வழியாக உள்ள நடைபாதையை பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் ரயில்வே நிர்வாகம் பராமரிப்பு என்ற பெயரில் நடைபாதையை அடைக்க முற்பட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஊழியர்கள் திரும்பிச் சென்றனர்.

   இந்நிலையில், மீண்டும் நடைபாதையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து ஆய்வு செய்து மக்கள் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.   இதுகுறித்து, கன்டோண்மெண்ட் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைய டுத்து போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai