Enable Javscript for better performance
அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழக சரகங்களை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பாண்டியாறு, தேவாலா, நெல்லியாளம், சேரம்பாடி, சேரங்கோடு, நடுவட்டம் பகுதியிலுள்ள தேயிலைக் கோட்டங்களில் உள்ள சரகங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு, வனவிலங்குகள் தாக்கி உயிரிப்பவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குதல், தொழிலாளர் குடியிருப்புகளை சீரமைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு தேயிலைக் கோட்ட மேலாளர் அலுவலகங்கள் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai