Enable Javscript for better performance
உலக பருந்துகள் தினம் அனுசரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    உலக பருந்துகள் தினத்தையொட்டி, அழிந்து வரும் பருந்துகள் இனத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

     உதகையில் நடைபெற்ற இக்கண்காட்சி குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன் கூறியதாவது:

     அழிந்து வரும் பருந்து வகைகளில் பிணந்தின்னிக் கழுகும் ஒன்றாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரக்கணக்கில் இந்த இனம் இருந்தது. குறிப்பாக, நீலகிரியில் இவற்றின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 800 ஆக இருந்த பிணந்தின்னிக் கழுகுகள் தற்போது 200-க்கும் குறைவாகவே உள்ளன.

     இந்தக் கழுகுகள் வனப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இறந்த விலங்குகளின் உடலை உண்டு வாழ்ந்த இவ்விலங்குகள் இறந்த கால்நடைகளின் உடலில் போடப்பட்ட டைக்னோபிளாக் என்ற வலி நிவாரணி மருந்தையும் சேர்த்து உண்டதால் அதிகளவில் இறந்து விட்டன.

     தற்போது, நீலகிரி மாவட்டத்தில் சீகூர் பகுதியில் மட்டுமே இத்தகைய கழுகு இனம் உள்ளது. இந்த கழுகு இனத்தை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு சர்வதேச கழுகுகள் தினத்தையொட்டி, இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

     இக்கண்காட்சியில் கழுகுகள், அவற்றின் செயல்பாடுகள் குறித்த புகைப்படங்களும், விளக்கங்களும் வைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சியை ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பார்த்துச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai