சுடச்சுட

  

  குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பரவலான மழை பெய்து வருகிறது.

   2 மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மழை பெய்யத் துவங்கி உள்ளதால் சாலைகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திடீர் மழையால் தேயிலை, மழைத் தோட்ட காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

   சனிக்கிழமை காலை 8 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): நடுவட்டம் 36, கிளன்மார்கன் 4, குந்தா 14, எமரால்டு 5, கெத்தை 13.5, அவலாஞ்சி 3, கிண்ணக்கொரை, அப்பர்பவானி 12, குன்னூர் 13.6, பர்லியாறு 6, கேத்தி 6.2, கோத்தகிரி 3, கோடநாடு 6, கூடலூர் 3, தேவாலா 10 என மொத்தம் 140.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

   மழை காரணமாக, குன்னூர்-மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் ஆடர்லி அருகே சிறிய அளவிலான கற்கள் தண்டவாளத்தில் விழுந்ததால், மலை ரயில் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai