சுடச்சுட

  

  குன்னூரில் கண்காணிப்புப் கேமராக்கள் பொருத்தும் பணி துவக்கம்

  By குன்னூர்  |   Published on : 06th September 2015 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 33 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியது.

   இப்பணியை மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், மாவட்டக் காவல்  கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

   தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறியது:

   நீலகிரி மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் பொருட்டு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்தாண்டை விட இந்தாண்டு முதல் 8 மாதங்களில் 50 சதவீதம் குற்றச் செயல்கள் குறைந்துள்ளன.

   கட்டாய ஹெல்மெட் அணியும் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் இருசக்கர வாகன விபத்துகளும் வெகுவாக குறைந்துள்ளன. கடந்த 3 மாதத்தில் நீலகிரி மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது 6608 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

   நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இல்லை. இருப்பினும் நக்சல் தனிப்படை, அதிரடிப் படை என 50 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் 2 கம்பெனிகள் மூலமாக 80 போலீசார் கூடுதலாகப் பணியாற்றி வருகின்றனர். இளைஞர் படையைச் சேர்ந்த 140 பேர் விரைவில் முறைப்படி தேர்வு எழுதி சிறப்பு காவலர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

   பொதுமக்கள் அறிமுகம் இல்லாத நபர்கள், நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி ஏடிஎம் எண்களில் குறியீட்டு எண்ணை பெற்று பலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, ரகசிய எண்ணை யாரிடமும் கூற வேண்டாம் என்றார்.

   இந்நிகழ்சியில், குன்னூர் மவுண்ட்ரோடு, மவுண்ட்பிளசண்ட் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன.

   இதில், குன்னூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுப்பிரமணி, ஆய்வார்கள் வி.வி சிவகுமார், அருள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai