சுடச்சுட

  

  குன்னூர் அருகே நக்சல் நடமாட்டம்? போலீஸார் தேடுதல் வேட்டை

  By குன்னூர்  |   Published on : 06th September 2015 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நீலகிரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் நக்சலைட் நடமாட்டம் குறித்த தேடுதல் வேட்டையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

   குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியையொட்டி உள்ள கேரளப் பகுதியில் முள்ளி என்ற இடத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், வனத்தில் சுற்றித் திரிந்த நபரை கேரள காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

   விசாரணையில், அவர் நக்சலைட்டாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கருதி, முள்ளி பகுதியைச் சுற்றியுள்ள செங்கல்கோம்பை, செங்கல்புதூர், பில்லூர் வனப்பகுதி, கேரள எல்லை பகுதியில் உள்ள வனத்தில் வெள்ளிக்கிழமை நக்சலைட்டு ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் தலைமையில் வனத்துறை, அதிரடிப் படை ஆகியோர் அடங்கிய 20 பேர் கொண்ட குழு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

   மேலும், கொலக்கம்பை வழியாக முள்ளி செல்வதற்கு வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் ஏற்கெனவே 3-ஆவது மாற்றுப் பாதைக்காக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில், நீலகிரி, காரமடை வனத்துறை சார்பில் 2 இடங்களில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.

   ஆனால், தற்போது இந்தத் தடுப்பு அகற்றப்பட்டதால் இந்த வழியாக நக்சலைட்டுகள் ஊடுருவ வாய்ப்புள்ளது. எனவே, இந்த பகுதியையும் காவல் துறையினர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

   மேலும், இப்பகுதியில் உள்ள ஆதிவாசி கிராமங்களுக்குச் சென்று சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எவரேனும் சுற்றித் திரிந்தால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai