Enable Javscript for better performance
பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கோத்தகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பேரூராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

     மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் உத்தரவின் பேரில், பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ், சுகாதார ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான பேரூராட்சி ஊழியர்கள் பேருந்து நிலையம், மார்க்கெட், டானிங்டன், ராம்சந்த் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில், அப்பகுதி கடைகளில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ. 13 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai