சுடச்சுட

    

    குன்னூர் அருகே பேரட்டி ஊராட்சிக்கு உள்பட்ட இந்திரா நகர் பகுதியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, தாட்கோ வாரியத் தலைவர் எஸ்.கலைச்செல்வன் தலைமை வகித்தார். எம்.பி.க்கள் கோபாலகிருஷ்ணன், அர்ஜூணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ரேஷன் கடை மூலமாக தற்போது இந்திரா நகர், அருள் நகர், அன்னை நகர், குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 236 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர்.

    விழாவில், மாவட்ட ஊராட்சித் தலைவர் மேனகா, ஜெகதளா ஊராட்சித் தலைவர் உஷா, கூட்டுறவுத் தலைவர் வினோத், குன்னூர் ஒன்றியச் செயலாளர் ஹேம்சந்த், கன்டோம்மென்ட் துணைத் தலைவர் எம்.பாரதியார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai