சுடச்சுட

    

    உதகை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 2.1 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    இத்தலார் ஊராட்சி, அப்புக்கோடு கிராமத்தில் உதகை சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடம், மக்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் துளிதலை கிராமத்தில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம் ஆகியவற்றை ஆட்சியர் பி.சங்கர் நேரில் ஆய்வு செய்தார்.

    பின்னர், வரையறுக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ. 1.21 கோடி மதிப்பில் துளிதலை பி.மணியட்டி முதல் புதுஹட்டி வரை சாலை தடுப்புச் சுவர் மற்றும் தார்ச் சாலை அமைக்கும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். அதேபோல, பாலகொலா ஊராட்சி, பி.மணியட்டி கிராமத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, அதைத் தொடர்ந்து, முதல்வரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணி, தங்காடு கிராமத்தில் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 22 லட்சம் செலவில் நடைபெற்று வரும் ஊராட்சி சேவை மையத்துக்கான பணிகள், டி.ஓரநள்ளி கிராமத்தில் ரூ. 11 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் தானிய சேமிப்பு கிடங்கு ஆகிய பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, மேல்குந்தா ஊராட்சி, இரியசீகை கிராம ஊராட்சி பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட சமையலறை கட்டடப் பணிகளை பார்வையிட்டதோடு, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கல்வித் தரம் குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர், காமராஜ் நகரில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், தாய் திட்டத்தின் கீழ் ஜெ.ஜெ.நகர் முதல் இடுகாடு வரை அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலையையும் பார்வையிட்டார். கிண்ணக்கொரை ஊராட்சியில் இண்ட்கோ தேயிலை தொழிற்சாலை பின்புறம் உள்கட்டமைப்பு இடைநிரப்பு நிதியின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பு சுவருக்கான பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

    ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, குந்தா வட்டாட்சியர் எஸ்தர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேகநாதன், நரசிம்மன், இத்தலார் ஊராட்சித் தலைவர் பிரேமலதா மற்றும் பொறியாளர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai