சுடச்சுட

  

  உதகை வானியல் ஆராய்ச்சி மையத்துக்கு கலாம் பெயர் சூட்டக் கோரிக்கை

  By உதகை  |   Published on : 07th September 2015 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உதகையிலுள்ள வானியல் ஆராய்ச்சி மையத்துக்கு மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பெயரை சூட்ட வேண்டுமென, தமிழ் தேசிய மக்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

  இக்கட்சியின் நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவர் அரச.பிரபாகரன் தலைமை வகித்தார்.

  கூட்டத்தில், உதகையிலுள்ள வானியல் ஆராய்ச்சி மையத்துக்கு மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பெயரை சூட்ட வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ. 50 வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் தேயிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், நீராதாரத்தை உறுதிபடுத்தவும் பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மாவட்டத்தில் பெருகிவரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலை வசதிகளை உருவாக்குவதுடன், உதகை-மேட்டுப்பாளையம் 3-ஆவது மாற்றுப் பாதை திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்காக பன்னாட்டு விசாரணை நடத்தக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai