Enable Javscript for better performance
குன்னூரில் தொடரும் மழை - Dinamani

சுடச்சுட

    

    குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மாலை நேரத்தில் பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அணைப் பகுதிகளிலும் தொடர்ந்து மழைப்பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் கனிசமான அளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai