சுடச்சுட

    

    விதிமுறைக்கு புறம்பாக கட்டடங்கள்:முறையாக ஆய்வு செய்ய வலியுறுத்தல்

    By குன்னூர்,  |   Published on : 07th September 2015 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீலகிரி மாவட்டத்தில், விதிமுறைக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்து முறையாக ஆய்வு நடத்த வேண்டுமென நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

    நீலகிரி மாவட்டத்தில், விதியை மீறி ஏற்படுத்தப்பட்ட கட்டடங்களால் அரிய வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் அழிந்து வருவதை கருத்தில் கொண்டு, இதனை கட்டுப்படுத்த மாஸ்டர் பிளான் தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது.

    ஆனால், மாஸ்டர் பிளான் தடை சட்டத்துக்கு புறம்பாக மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. வனப்பகுதி, நீராதார பகுதி மட்டுமல்லாமல் தமிழக, கேரள எல்லை என பல இடங்களில் மலையை குடைந்து நிலச்சரிவு ஏற்படுத்தும் வகையில் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இதனால் இம்மாவட்டத்தின் அடையாளம் மறைந்து வருகிறது.

    இதுகுறித்து உள்ளாட்சி நிர்வாகங்கள், வருவாய்த் துறை, புவியியல் துறை, வனத்துறை மவுனம் சாதித்து வருகின்றன. மேலும், பசுந்தேயிலைக்கு விலைச் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை காரணமாகக் கூறி சிறு விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பெற்று கட்டுமானப் பணிகள் நடக்கிறது.

    இந்நிலையில், விதிமுறைக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, விரைவில் குன்னூருக்கு வருகை தரவுள்ள ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு, ஷீலா ராணி சுங்கத் ஆகியோர் அடங்கிய குழுவினர், இதுகுறித்து விரிவான ஆய்வு செய்து மலை மாவட்டத்தை பேரழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai