சுடச்சுட

  

  உதகையில் அண்ணா மிதிவண்டிப் போட்டி: செப். 12-ல் நடக்கிறது

  By உதகை  |   Published on : 08th September 2015 07:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தையொட்டி, அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் உதகையில் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறுகிறது.

   இதுதொடர்பாக, மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலக செய்திக்குறிப்பில்  தெரிவித்துள்ளதாவது:

   பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீலகிரி மாவட்ட மையம் சார்பில், செப்டம்பர் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) உதகை மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்ட திறந்தவெளி விளையாட்டரங்கில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டிகள் நடத்தப்படுகின்றன.

   இப்போட்டிகளில் 13 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15, 17 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவுகளில் மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் தூர அளவுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

   ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு ரொக்கப் பரிசுகளும், முதல் 10 இடங்களைப் பெறுவோருக்கு தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

   போட்டிகளில் பங்கேற்பதற்கான நுழைவு விண்ணப்பங்களை செப்டம்பர் 11-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai