சுடச்சுட

  

  கொடநாடு ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

  By கோத்தகிரி  |   Published on : 08th September 2015 07:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோத்தகிரியை அடுத்த கொடநாடு ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி மூலமாக திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

   கொடநாடு ஊராட்சி, கெரடாமட்டத்தில் 30 படுக்கை வசதிகளுடன் ரூ. 2.24 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழாவுக்கு, கொடநாடு ஊராட்சித் தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார்.

   தேனாடு ஊராட்சித் தலைவர் ஸ்டீபன், கோத்தகிரி பேரூராட்சித் தலைவர் சை.வாப்பு, மாவட்ட அவைத் தலைவர் தேனாடு லட்சுமணன், மருத்துவத் துறை மாவட்ட இணை இயக்குநர் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி மூலமாக  திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

   இதையடுத்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். அர்ஜுனன், தாட்கோ தலைவர் கலைச்செல்வன், ஆவின் தலைவர் மில்லர் ஆகியோர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் குத்து விளக்கேற்றி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

   இதில், ஜக்கனாரை ஊராட்சித் தலைவர் சித்ரகலா சிவாஜி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சாந்தி ராமு, குன்னூர் தொகுதிச் செயலர் கே.கே.மாதன்,நெடுகுளா ஊராட்சி செயலர் ஜி.ஆர்.வி.கிருஷ்ணன், ஜக்கனாரை ஊராட்சி செயலர் சிவராஜ்,

  திட்டக்குழு உறுப்பினர் கே.பி.ராமு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai