சுடச்சுட

  

  மலை ரயில் டிக்கெட் விநியோகம் தனியாரிடம் ஒப்படைப்பு: சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

  By குன்னூர்  |   Published on : 08th September 2015 07:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குன்னூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் விநியோகம் தனியார் மயமாக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

   உலக புகழ்பெற்ற குன்னூர் மலை ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 5 பெட்டிகளுடன் மலை ரயில் செல்வதால் இதில், 250 பேர் வரை பயணம் செய்யலாம்.

   இந்நிலையில், இந்தியாவில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், குன்னூர்-உதகை இடையே இயக்கப்படும் மலை ரயிலுக்கு டிக்கெட் வழங்கும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

   இந்த வழித்தடத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்து வருவதால், இதைப் பயன்படுத்தி ஒரு சில தனியார் நிறுவனத்தினர் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகளவில் டிக்கெட் பெற்று கொடுக்கின்றனர். இதனால், ரயிலில் இடமில்லாமல் பெரும்பாலான பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது.

   இதுகுறித்து, நீலகிரி நீராவி ரத அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் நடராஜ் கூறுகையில்: இந்தியாவிலேயே நீலகிரி, டார்ஜிலிங் ஆகிய இடங்களில் தான் மலை ரயில் இயக்கப்படுகிறது. இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பயணிக்கின்றனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் பயணித்து வருகின்றனர்.

   இந்நிலையில், ரயில் டிக்கெட் வழங்கும் பணியை தனியாரிடம் ஒப்படைத்துள்ளது கண்டனத்திற்கு உரியதாகும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai